கொடூரம்.. 30 மாணவிகளைச் சீரழித்த பாஜக கவுன்சிலர் மகன்... அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்!

 
கோவா பாஜக கவுன்சிலர் கோவா பாஜக கவுன்சிலர்

கோவா மாநிலம் போண்டா பகுதியில், கடந்த 3 ஆண்டுகளாகப் பள்ளி மாணவிகளைத் திட்டமிட்டுப் பாலியல் வலையில் வீழ்த்தி சீரழித்த 22 வயது இளைஞர் சோஹம் நாயக் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் போண்டா நகராட்சி பாஜக பெண் கவுன்சிலரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சோஹம் நாயக், சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு மட்டுமின்றி, அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களைக் காட்டி மாணவிகளைத் தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்தும் வந்துள்ளார். சமீபத்தில், தனது நண்பர்களிடம் பெருமை பேசுவதற்காக இந்த வீடியோக்களை அவர் காட்டிய போது, இந்த விவகாரம் வெளியே கசிந்து போலீசாரின் கவனத்திற்குச் சென்றது.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சோஹம் நாயக் மீது போக்சோ மற்றும் ஐடி சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

சோஹம் நாயக்கின் செல்போன் மற்றும் லேப்டாப்பைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அதில் இருந்த ஏராளமான அந்தரங்க வீடியோக்களைக் கண்டறிந்துள்ளனர். இதுவரை சுமார் 30 மாணவிகள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சிசிடிவி குளியல் அறை குளியலறை பாத்ரூம் செல்போன் மிரட்டல் பாலியல் செக்ஸ்

குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் பாஜக கவுன்சிலரின் மகன் என்பதால், இந்த வழக்கை மறைக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எனினும் "சட்டம் தன் கடமையைச் செய்யும், குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது" என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதியளித்துள்ளார். தற்போது இந்த வழக்கு மாநிலக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.