கொடுமை... 18 வயசு தான்... இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமத்தில் தண்ணீர் கிணற்று தெருவில் வசித்து வருபவர் முத்துபாண்டி. கருப்பட்டி வியாபாரி. இவருடைய மகள் பிரியா (18). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு, தனியார் மில்லில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக கயத்தாறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!