கொடூரம்... 4 குழந்தைகளை கால்வாயில் வீசி கொலை செய்த தாய்!

 
பாக்யா

கர்நாடக மாநிலத்தில்  நிலகி கிராமத்தில் வசித்து வருபவர் நிங்கராஜ். இவரது மனைவி பாக்யா. இவர்களுக்கு 5 வயதில் தனு, 3 வயதில் ரஷிதா, 13 மாத இரட்டை ஆண்குழந்தை என 4 குழந்தைகள். கடந்த ஒரு மாத காலமாக  கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப சொத்துக்களை பகிர்ந்து கொள்வதில்   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்யா கோபத்தில் தன் 4 குழந்தைகளையும் கால்வாயில் வீசி கொலை செய்துள்ளார்.

பாக்யா

இதனையடுத்து  அவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் பாக்யா  உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து  பாக்யா மற்றும் அவருடைய கணவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முதலில் பாக்யா தன் கணவன் தான் குழந்தைகளை கொலை செய்ததாக கூறினார்.  ஆனால் கணவன் தன் மனைவிதான் குழந்தைகளை கொன்றதாக கூறினார். இறுதியில் பாக்யா தான் குழந்தைகளை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பாக்யா மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!