கொடூரம்.... குளித்துக் கொண்டிருந்த இளம்பெண் கடத்தி பலாத்காரம்... பக்கத்து வீட்டுக்காரர் வெறித்தனம்!

குளியலறையில் குளித்து முடித்து விட்டு, வெளியே வந்த இளம்பெண் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞரால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிசென்று தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை பிடித்து அடித்து வெளுத்தனர்.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லே-அவுட்டில் கவிதா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் இளம்பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம் ( 24) எனும் இளைஞர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு கவிதா குளிப்பதற்காக சென்றார். அப்போது அவர் குளித்து முடித்து விட்டு குளியலறையின் வெளியே வந்த போது, குளியலறையின் வெளியே காத்திருந்த மன்சூர் ஆலம், கவிதாவை தன்னுடைய வீட்டுக்குள் குண்டு கட்டாக தூக்கி சென்று, தன்னுடைய வீட்டில் வைத்து கவிதாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
கவிதாவின் தொடர்ந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக ஓடிச் சென்றுள்ளனர். பொதுமக்கள் திரள்வதை அறிந்து, வீட்டிலிருந்து வெளியே ஓடி தப்பிச் செல்ல முயன்ற மன்சூர் ஆலமை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து பிடதி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆலமைக் கைது செய்த போலீசார், இது குறித்து நடத்திய விசாரணையில், மன்சூர் ஆலம் ராமநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையில், பலாத்காரத்திற்கு உள்ளான இளம்பெண் ரத்த காயங்களுடன் இருந்த நிலையில், அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதான மன்சூர் ஆலம் மீது பிடதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!