கதறும் இல்லத்தரசிகள்... சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 20% உயர்வு.. உடனடியாக அமலுக்கு வந்தது!
இப்படியே விலையை ஏற்றிக்கொண்டே போனால் நாங்க வாழ்றதா இல்லையா? என்பது ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் மன குமுறலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர்களுக்கும், செல்போன், லேப்-டாப்களுக்கும் வரியைக் குறைக்கும் மத்திய அரசு, அத்தியாவசியப் பயன்பாடான சமையல் எண்ணெய், பருப்புகள் போன்றவைகளின் மீதான வரியை உயர்த்திக் கொண்டே செல்கிறது. அதே சமயம் தங்கத்தின் மீதான வரியைக் குறைக்கிறது. வெறும் தங்கத்தையா வாங்கி சாப்பிட முடியும்? அதெல்லாம் பணக்காரங்க மேலும் மேலும் வாங்கி கிலோ கணக்குல சேர்த்து வைப்பாங்க. நாங்க அன்றாடங்காய்ச்சிங்க என்று குமுறுகிறார்கள் இல்லத்தரசிகள்.

நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் பாமாயில், சூரியகாந்தி போன்ற சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு திடீரென கடுமையாக உயர்த்தியது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயா எண்ணெய், சன் ஃபிளவர் ஆயில் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5%ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இவை உடனடியாக அமலுக்கும் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் உடனடியாக இந்த வரி உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உடனே கடைகளில் சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் எண்ணெய்களின் விலையையும் உயர்த்தி விற்க துவங்கி விட்டனர். திடீரென 22.5 சதவீதம் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதைக் கண்டு கடைக்கு சென்ற இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விலை உயர்வு ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுகள், தின்பண்டங்கள், ஸ்வீட் ஸ்டால்களில் விற்பனைச் செய்யப்படும் பலகாரங்கள் என அனைத்திலும் எதிரொலிக்கும் என்பதால் அவற்றின் விலையில் இனி அடுத்தடுத்து உயர்த்தப்படும் என்று அஞ்சப்படுகிறது.

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரி ஒரே நாளில் 20% உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
