சிஎஸ்கே கொண்டாட்ட நிகழ்வு.. ஆர்வம் காட்டாத ரசிகர்கள்... ஏ.ஆர். ரகுமான் கச்சேரி இருந்தும் டிக்கெட் விற்பனை மந்தம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாகத் தனது ரசிகர்களுக்காக அறிவித்த 'ROAR '26' (OG's Are Back) கொண்டாட்ட நிகழ்விற்கான டிக்கெட் விற்பனை, வழக்கமான சிஎஸ்கே வேகத்தில் இல்லாமல் மந்தமாக இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள 'ROAR '26' என்ற பிரம்மாண்ட ரசிகர் சந்திப்பு நிகழ்விற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்தத் திருவிழாவில் ரசிகர்களை ஈர்க்கப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், பத்ரிநாத் போன்ற 'OG' (Original) நட்சத்திரங்கள் அடங்கிய அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான தற்போதைய சிஎஸ்கே அணியும் மோதும் ஒரு ஜாலி மேட்ச். நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனி மீண்டும் மஞ்சள் சீருடையில் களமிறங்கும் தருணம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி.

