சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பேரிடி.. ’தல’ தோனி ஏப்ரல் இறுதி வரை விளையாட மாட்டார்.. அணி நிர்வாகம் அறிவிப்பு!

 
தோனி தோனி

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதுகெலும்பாகத் திகழும் எம்.எஸ். தோனிக்குக் காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு, அணி நிர்வாகத்தையும் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தோனிக்குக் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, அவர் குறைந்தது 2 வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளன.

தோனி

தோனியின் காயம் குணமடையவும், அதன் பிறகு அவர் முழுமையான பயிற்சி மேற்கொண்டு களத்திற்குத் திரும்பவும் கூடுதல் நாட்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தோனி ஏப்ரல் கடைசி வாரம் வரை அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஏப்ரல் மாதம் முழுவதும் அவர் விளையாடுவது சந்தேகமே.

தோனி

ஐபிஎல் தொடர் மே 31ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடரின் ஆரம்பக் கட்டத்திலேயே தோனி போன்ற ஒரு அனுபவ வீரர் இல்லாதது சிஎஸ்கே அணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன் பொறுப்புகளைக் கவனிப்பது யார் என்ற விவாதம் இப்போதே சூடுபிடித்துள்ளது. கடந்த போட்டியில் ரகானே மற்றும் ரகுவன்ஷியின் அதிரடி ஆட்டம் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தாலும், தோனியின் 'ஃபினிஷிங்' ஸ்டைலை மைதானத்தில் பார்க்க இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.