ரசிகர்கள் கொண்டாட்டம்... 63 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

 
சிஎஸ்கே குஜராத்
 ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்ன்ஸ் அணியும் மோதின.  சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் முதலில்  டாஸ் வென்ற சென்னை அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திராவின்  அபாரமான ஆட்டத்தில்  இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதங்களை நெருங்கினர்.  ரச்சின் ரவீந்திரா 46 ரன்களில்  3 சிக்ஸர்கள், ஆறு பவுண்டரிகளை விளாசியிருந்தார். அடுத்து கேப்டன் ருத்துராஜ்  ஒரு சிக்சர் மற்றும் ஐந்து பௌண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கே குஜராத்
அடுத்து வந்த அஜிங்கியா ரஹானே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். சிவம் துபே  வந்த பந்தையெல்லாம் வெளுத்து வாங்கி  வெறும் 23 பந்துகளில் 5 சிக்ஸர்களும், 2 பவுண்டரிகளும் அடித்து  51 ரன்கள் விளாசினார்  டேரில் மிட்சல் 20 பந்துகளில் 24 ரன்களை சேர்த்தார்.  சமீர் ரிஸ்வி ஆறு பந்துகளில் 14 ரன்களும்,  ரவீந்திர ஜடேஜா 3 பந்துகளில் 7 ரன்களும் எடுத்தனர்.  அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சிஎஸ்கே

குஜராத் அணியில்  ரஷீத் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை அடித்தனர்.  
207 ரன்கள் என்ற இலக்குடன் களம்  இறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கம் முதலே சொதப்பல் தான்.   விருத்திமான் சாஹா 21, சாய் சுதர்ஷன் 37, டேவிட் மில்லர் 21  , விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு  143 ரன்கள் எடுத்து  63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குஜராத் டைட்டன்ஸ் . சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web