அமெரிக்காவின் தடை உத்தரவால் கியூபாவுக்கு ரூ.68,000 கோடி இழப்பு!

 
கியூபா

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பொருளாதார மற்றும் வர்த்தகப் போரின் காரணமாக, கியூபா கடுமையான நிதிச் சுமையைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு, கியூபா மீது கடுமையான எண்ணெய் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகளின் காரணமாகக் கடந்த ஓராண்டில் மட்டும் கியூபாவிற்கு சுமார் ரூ.68 ஆயிரம் கோடி (8.1 பில்லியன் டாலர்) அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கியூபா அரசு அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

கியூபா

அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரத் தடைகளால் கியூபாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஒரு நாளைக்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெற்று அவதிக்குள்ளாகி வருவதாகவும், நரக வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கியூபா தரப்பில் ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.