3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்பு! பாலியல் துன்புறுத்தல் சந்தேகம்.. 2 சிறுவர்களிடம் விசாரணை”

 
கடலூர்

 

கடலூர் முதுநகர் பகுதியில் வீட்டின் அருகே 3 வயது குழந்தை மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக 2 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் அருகே குழந்தை மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்த குடும்பத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆம்புலன்ஸ்

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பதால், விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதற்கிடையே குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, குழந்தையின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.குழந்தையின் மருத்துவ நிலை மற்றும் போலீசாரின் விசாரணை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.