50000 கோழிகள் உயிரிழப்பு... பறவைக் காய்ச்சல் இல்லை; தீவனத்தில் நச்சு உள்ளதா என ஆய்வு!

 
கோழி

 

கடலூரில் 50 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சல் இல்லை; தீவனத்தில் நச்சு உள்ளதா என ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணைகளில் சுமார் 50 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோழிகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

கோழி பண்ணை

தம்மனாம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பண்ணை உரிமையாளர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து கால்நடைத் துறை அதிகாரிகள் பண்ணைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனம் உள்ளிட்டவற்றின் மாதிரிகளும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கோழி காய்ச்சல்

இதற்கிடையே, கோழிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக கால்நடைத் துறை அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார். மேலும், கோழிகளுக்கு வழங்கப்பட்ட தீவனத்தில் நச்சுத்தன்மை உள்ளதா என்பது குறித்த ஆய்வு முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்களும் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அச்சமடையாமல், அதிகாரிகள் வழங்கும் முன்னெச்சரிக்கை அறிவுரைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.