'பர்சனல் செகரட்டரி' வேலை தருவதாகக் கூறி இளம்பெண் பலாத்காரம்... தொழிலதிபர் கொடூரம்!

 
பர்சனல்

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் தள்ளம்பளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை தொடர்பாகப் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் நிறுவனரைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவரான தொழிலதிபர் லட்சுமிகாந்தன் (42 வயது) என்பவர், அந்தப் பெண்ணிடம் பர்சனல் செகரட்டரி வேலை இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் மாதச் சம்பளமாக 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அந்தப் பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து ஏமாற்றியுள்ளார்.

உல்லாசம் சிசிடிவி செல்போன் பாலியல் மிரட்டல்

இதனை நம்பி கடந்த மே மாதம் 20 ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த அந்த இளம்பெண்ணை, தொழிலதிபர் லட்சுமிகாந்தன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். கிருமாம்பாக்கம் ராதாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிட அறை ஒன்றில் அந்தப் பெண்ணைத்   தங்க வைத்துள்ளார். பின்னர் கடந்த மே 25 ஆம் தேதி அந்த அறைக்கு வந்த லட்சுமிகாந்தன், தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி அந்த  பெண்ணிடமிருந்து 5 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை பலாத்காரம் மனைவி தகராறு தம்பதி சண்டை

அதன் பின்னர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுபோதையில் இளம்பெண் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த லட்சுமிகாந்தன், அவரை வலுக்கட்டாயமாகப் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தொழிலதிபர் லட்சுமிகாந்தனை  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.