CUTE தோ்வு... பிப்ரவரி 8 வரை விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!

 
மாணவர்கள் வகுப்பறை தேர்வு நட்பு தோழமை ப்ரெண்ட்ஷிப்

மத்திய பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பு இடங்களுக்கான பொதுநுழைவுத் தோ்வுக்கு (க்யூட்) விண்ணப்பிப்பதற்குரிய கால அவகாசம் பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தோ்வில் (க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும்.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

இந்த தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் 2025-26 முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு கணினி வழியில் வரும் மாா்ச் 13ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் பிப்ரவரி 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பெண்கள் யுஜிசி

இதனைத் தொடர்ந்து க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 9ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இது தவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 01140759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியே தொடா்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web