“மறப்போம், மன்னிப்போம்” – அதிமுகவினருக்கு சி.வி. சண்முகம் அழைப்பு

 
சண்முகம்

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள், ஒதுங்கியிருப்பவர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சண்முகம்

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், கட்சி மீண்டும் வலிமை பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

கடந்த காலத்தில் இரு தரப்பிலும் தவறுகள் நடந்திருக்கலாம் என்றும், அவற்றை மறந்து எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். சசிகலா உள்ளிட்ட அனைவரையும் கட்சியில் இணைத்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தொண்டர்களுக்கு தேர்தல் வெற்றி குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அதிமுக ஒன்றுபட்டு வலிமையாக இருப்பதாக மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்பதே தனது வேண்டுகோள் என்றும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.