கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஒர்னாப் புயல் காரணமாக, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள விசைப்படகுகள் உடனடியாகக் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளன.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலில் உள்ள மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

கடலுக்குச் செல்லத் திட்டமிடும் மீனவர்கள் வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றி, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.