இன்று உருவாகிறது ‘அர்னாப்’ புயல்... தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

 
புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று அக்டோபர் 26, திங்கள்கிழமை 'அர்னாப்' புயலாக உருவெடுக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுவடைந்து இன்று 'அர்னாப்' புயலாக மாறுகிறது. இந்த புயலானது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, 'மிக தீவிரப் புயலாக' ஆந்திரக் கடலோரப் பகுதிகளை அடையக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

புயல் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.