அர்னாப் புயல் எதிரொலி: தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு!

 
எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட  துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் வலுவடைந்து நகர்ந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தைவான் சூறாவளி புயல்

இதன் ஒரு பகுதியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3-ம் எண் உள்ளூர் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காரணமாகக் கடல் சீற்றத்துடன் காணப்படக்கூடும் என்பதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் எச்சரிக்கை கூண்டு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, அர்னாப் புயல் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, அதிகாரிகள் வெளியிடும் வானிலை அறிவிப்புகளைப் பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.