பகீர் வீடியோ... சூறாவளி தாக்குதல்... 5 பேர் பலி... 500க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
சூறாவளி

 மேற்கு வங்காள மாநிலத்தில் நேற்று இரவு மிகக் கடுமையான சூறாவளி வீசியது. இதனால் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மக்களவை தேர்தல் காரணமாக பிசியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேற்கு வங்க முதல்வர் தமது அனைத்து பிரச்சார அரசியல் நிகழ்வுகளை ஒத்தி வைத்து விட்டு உடனடியாக நேற்றிரவே  ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையை நேரில் பார்வையிட்டார்.


 

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என ஆறுதல் கூறினார். அத்துடன்  ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சூறாவளியால் பாதித்த மக்களை சந்தித்து அவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

மேற்கு வங்காளம்

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புபணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். அத்துடன்  மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிர்வாகம் வழங்கி வருகிறது. அதே நேரத்தில்  சூறாவளியால்  ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன எனக் கூறினார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web