வலுப்பெற்று தீவிரமடைந்தது முரசு புயல் - 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடலில் முரசு புயல் நிலை கொண்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய துறைமுகங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முரசு புயல் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயலின் நகர்வு மற்றும் கடல் வானிலை நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடலுக்குச் செல்லும் மீனவர்கள் துறைமுக நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
