புயல் சின்னம் உருவானது... நவ.20 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை!

 
கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் கொந்தளிப்பு

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவான நிலையில் தமிழக மீனவர்கள் யாரும் நவம்பர் 20ம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், புயல் சின்னம் உருவானதாகவும், அடுத்த 36 மணி நேரத்திற்குள்ளாக இது புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை - கடலூர் இடையே புயல் கரையைக் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மீனவர்கள் இலங்கை கச்சத்தீவு படகு

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நவம்பர் 20-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

 மீனவர்கள்

இந்த வானிலை சலனத்தால் இன்று நவம்பர் 15 முதல் 20-ம் தேதி வரை வடதமிழகம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்பது பின்னர் வெளியாகும் வானிலை அறிவிப்புகளின் அடிப்படையிலேயே உறுதியாகும்.