140 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று... தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல்... அக்.28-ல் கரையைக் கடக்க வாய்ப்பு!

 
காற்றழுத்தம் புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து 'அர்னாப்' புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அர்னாப் புயலாக உருவெடுக்கவுள்ளது. இந்தப் புயலானது அக்டோபர் 28-ம் தேதி வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பசிபிக் அட்லாண்டிக் கடல் புயல்

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 115 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

இதன் காரணமாகக் கடலோரப் பகுதி மக்களுக்குத் தீவிர முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.