மாதத்தின் முதல் தேதியில் இன்ப அதிர்ச்சி... சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு!

 
சிலிண்டர்

 

வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள்  எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன் விலைகள் மாதத்தின் 1 மற்றும் 15 ம் தேதிகளில் பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.  மார்ச் மாதம் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது இதனால் வணிகர்கள், சிறு வியாபாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் .

சிலிண்டர்

இன்று ஏப்ரல் 1ம் தேதி திங்கட்கிழமை மாதத்தின் முதல் நாளில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  aதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30 குறைந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிலிண்டர்

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 1ம் தேதி வரை விலை மாற்றம் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு   சிலிண்டர் விலை மாறலாம் என கூறப்படுகிறது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் ரூ918  க்கும், வர்த்தக சிலிண்டர் 1960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web