செப்டம்பர் 1ம் தேதி சிலிண்டர் விலை உயர வாய்ப்பு? இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
Aug 30, 2026, 06:43 IST
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செப்டம்பர் முதல் தேதியன்று எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்பதால் பொதுமக்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் தாக்கம் ஏற்படக்கூடும். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.202 குறைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதே காலகட்டத்தில் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டது. இந்த மாதம் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
