இல்லத்தரசிகள் உற்சாகம்... 45 நாள் இல்ல... இனி 25 நாட்களில் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யலாம்...!

 
சிலிண்டர்

 

கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி புதிய சிலிண்டர் பதிவுக்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.

சிலிண்டர்

இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நீண்ட நாட்களாகச் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது.

கேஸ் சிலிண்டர்

இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை மிக எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தச் சிறப்பான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் அனைவரும் மனதார வரவேற்பது குறிப்பிடத்தக்கது.