இன்று முதல் அமைச்சர்களோட பந்தாவுக்கும் செக் - தேர்தல் விதிகள் செம ஸ்ட்ரிக்ட் | எலெக்ஷன் ‘கேம்’ ஆரம்பம்!
Mar 16, 2026, 06:00 IST
"இனிமே ஆவணமே இல்லாம அதிக பணத்தை வச்சுக்கிட்டு சுத்துனா, அது தேர்தல் கமிஷன் கைக்குத் தான் போகும்!" - எலெக்ஷன் டேட் வந்தாச்சு, கூடவே கெடுபிடிகளும் வந்தாச்சு.
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல கொண்டு போறீங்களா? அப்போ கையில ரசீது இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. சும்மா 'நகை எடுக்கப் போறேன்', 'பொண்ணு கல்யாணத்துக்குப் போறேன்'னு சொன்னா அதிகாரிகள் ஒத்துக்க மாட்டாங்க.
அதுமட்டும் இல்லாம, அமைச்சர்களும் இப்போ அரசு கார்ல பிரச்சாரத்துக்குப் போக முடியாது. ஜாதி, மதத்தை வச்சு ஓட்டு கேட்டா அவ்வளவுதான்.. வேட்புமனுவே காலி ஆகிடும்.
அரசு சார்பில் எவ்விதப் புதிய திட்டங்களையோ, சலுகைகளையோ அல்லது மானியங்களையோ அறிவிக்க முடியாது. அமைச்சர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசு வாகனங்கள், விமானம் அல்லது அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தக் கூடாது.
எந்தவொரு அரசுத் துறையிலும் புதிய பணி நியமனங்கள் அல்லது அதிகாரிகளின் இடமாற்றங்களைச் செய்யக் கூடாது. (அவசரத் தேவைக்கு ஆணையத்தின் அனுமதி கட்டாயம்).

