அடக் கொடுமையே... மருமகளுடன் உல்லாசம்... இடையூறாக இருந்த 5 மாதப் பேத்தியைக் கொன்ற மாமனார்!

 
காவலர்கள் இருவர் உல்லாசம் காவலர்கள் இருவர் உல்லாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மருமகளுடன் இருந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 5 மாதப் பெண் குழந்தையை மாமனாரே கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் குறித்த முழு விபரங்கள் இதோ:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த ராமச்சந்திரம் கிராமத்தில், குடும்ப உறவுகளைக் சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யவாணி. இவரது கணவர் தமிழரசன் டிராக்டர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த நிலையில், மாமனார் ராஜனுக்கும் மருமகள் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

உல்லாசம்

இந்நிலையில் முதல் குழந்தை பிறந்த அடுத்த சில மாதங்களிலேயே சத்யவாணி மீண்டும் கர்ப்பமானார். இது தமிழரசனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனது தந்தைக்கும் மனைவிக்கும் இடையே தவறான உறவு இருப்பதை அறிந்த தமிழரசன், பலமுறை மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இருப்பினும் அவர்கள் தங்களது தொடர்பைக் கைவிடவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம், தமிழரசன் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், ராஜன் தனது மருமகளை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அந்த நேரத்தில் சத்யவாணியின் 5 மாதக் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. சத்யவாணி எழுந்துச் சென்று குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டுச் சென்ற சமயம், ஆத்திரமடைந்த ராஜன் குழந்தையின் மூச்சை அமுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தையின் உடலை அருகில் இருந்த ஒரு கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். இருவரும் குழந்தையைக் காணவில்லை என நாடகமாடியுள்ளனர்.

குழந்தை

குழந்தையை அனைவரும் தேடிப் பார்த்த நிலையில், கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்ட நிலையில், வேப்பனப்பள்ளி போலீசார் சத்யவாணியிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாருக்குச் சந்தேகம் வலுத்தது. தீவிர விசாரணையில், மாமனார் ராஜன் குழந்தையைக் கொன்றதும், அதற்குச் சத்யவாணி உடந்தையாக இருந்ததும் உறுதியானது. இதையயடுத்து, ராஜன் மற்றும் சத்யவாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.