வீட்டில் சமைக்கல... நடன வகுப்புக்கு சென்ற மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் வசித்து வரும் தம்பதி கிருஷ்ணலால் யாதவ், யாமினி கிருஷ்ணலால் தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள். இதில் யாமினி நடன வகுப்புக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் வீட்டில் சமைக்காமல் நடன வகுப்பிற்குச் சென்ற மனைவியை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை நடந்த இக்கொடூரச் சம்பவத்தில் யாமினி கிருஷ்ண லால் யாதவ் என்ற 38 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் கிருஷ்ண லால் யாதவ், மதுபோதையில் தனது இரண்டு குழந்தைகளின் முன்னிலையில் யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த யாமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கணவரை உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
