நடன ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை... திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொடூரம்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னமங்கலம் அருகே உள்ள சேரூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 55). நடன ஆசிரியையான இவருக்குத் திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், மலப்புரம் அருகே தேஞ்சிப்பலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கீஷ் (வயது 39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் பொழுதைக் கழித்து வந்துள்ளனர்.

கடந்த 4 ஆம் தேதியன்று தனலட்சுமி தான் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு விக்னேசுடன் திருச்சூர் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள செருதுருத்து பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கிய அவர்கள் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது தனலட்சுமி தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதை அடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு விடுதி அறையை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டார். அதன் பிறகு தனது சொந்த ஊருக்குச் சென்று நடந்த விவரங்களைச் சகோதரியிடம் கூறிவிட்டுத் தேஞ்சிப்பலம் காவல் நிலையத்தில் நேரில் சரண் அடைந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் விடுதிக்குச் சென்று உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விக்னேசைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
