இறுதி ஊர்வலத்தில் நடனமாடுவதில் மோதல் - திருவள்ளூரில் தவெக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்பத்தூர் அருகே நடைபெற்ற ஒரு இறுதி ஊர்வலத்தின் போது, நடனம் ஆடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் மற்றும் தகராறு உருவாகியுள்ளது.
இந்த மோதலில் தவெக பிரமுகரான மணிகண்டன் என்பவரை எதிர்தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த மணிகண்டன் உடனடியாக மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யக்கோரி மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் தவெக கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
