ஆகஸ்டு மாத தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம்!

 
ஆகஸ்டு மாத தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம்!


இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வழிபாட்டு தலங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்டு மாத தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! திருப்பதி தேவஸ்தானம்!


அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்திற்கான தரிசன டிக்கட்டுகள் இன்று காலை முதல் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

தினசரி 5000பேருக்கு மட்டுமே தரிசனம் என்ற அடிப்படையில் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என திருமலை திருப்பதி-தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

From around the web