சபரிமலை கோயிலில் பிப்ரவரி 12ல் நடை திறப்பு!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக வரும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரிசனத்துக்கான முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை, ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி நடை சாத்தப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, பந்தளம் மன்னர் பிநிதிநிதிகளிடம் கோயில் சாவியை ஒப்படைத்தார்.

சபரிமலை

இந்நிலையில் மாதாந்திர பூஜைக்காக வரும் 12-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இதன்படி மாதாந்திர பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவுகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. மண்டல, மகரவிளக்கு காலங்களில் நெரிசல், நீண்ட நேரம் காத்திருப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். ஆனால் மாதாந்திர பூஜையில் இதுபோன்ற நிலை இருக்காது என்பதால் ஐயப்ப பக்தர்கள் பலரும் தரிசனத்துக்காக ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web