தேதி மாற்றம் அறிவிப்பு... டிச.3ல் தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, டிசம்பர் 3-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், தற்போது டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்க உள்ளனர்.

மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரத் தவறியதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
