52 வயதிலும் டேட்டிங்... ’‘பிகினி’யில் பிரபல நடிகை சொன்ன பதில்!
மும்பை: பாலிவுட்டின் ஸ்டைலிஷ் நடிகை மலைக்கா அரோரா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் அர்ஜுன் கபூருடனான காதல் முறிவு மற்றும் புதிய தொழிலதிபருடன் டேட்டிங் எனப் பரவிய செய்திகள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய மலைக்கா, "ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகள் என்னைப் பெரிதும் பாதித்தன. ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுவது வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பார்க்கும்போது நானும் என் மகன் அர்ஹான் கானும் சேர்ந்து சிரிக்கிறோம். இப்போது எனக்குப் பக்குவம் வந்துவிட்டது," என்று கூலாகப் பதிலளித்துள்ளார்.
திருமண முறிவு மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலைக்கா அரோரா தற்போது திரையில் மீண்டும் பிஸியாகி வருகிறார். ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான “தம்மா” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு சிறப்புப் பாடலுக்கு மலைக்கா ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 52 வயதிலும் இளம் நடிகைகளுக்குப் போட்டியாக யோகா மற்றும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் தனது உடற்கட்டைக் பராமரித்து வருவதால், அவருக்குப் பட வாய்ப்புகள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
