வீரமணி வீட்டிற்குச் சென்று வந்தபின் மகள் தற்கொலை - 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் பகிரங்கப் புகார்!

 
ஜெம் வீரமணி

தொழிலதிபர் வீரமணி என்பவர் தனது மகளின் படிப்புக்கு உதவியதன் காரணமாக, அவர் அடிக்கடி வீரமணியின் வீட்டிற்குச் சென்று வந்ததாகவும், அங்கு ஏற்பட்ட மன உளைச்சலால் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் நடந்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகார் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரானைட் வீரமணி

கடந்த 2016-ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து வந்த அப்பெண்ணின் கல்விச் செலவுக்குத் தொழிலதிபர் வீரமணி உதவி புரிந்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி அடிக்கடி வீரமணியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். வீரமணியின் வீட்டிற்குச் சென்று வந்த காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் பிரச்சினைகள் காரணமாகத் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக அந்தத் தாய் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ கைது

சம்பவம் நடந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மகளின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் நேரில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.