”மகளே உனக்கு கடிதம் எழுதுகிறேன்”.. பொதுக்கூட்டத்தில் சிறுமியை பாராட்டிய பிரதமர் மோடி..!!

 
பிரதமர் மோடி
சட்டீஸ்கரில் கூட்டத்தில் தனது புகைப்படத்தை வரைந்து எடுத்து வந்த சிறுமியை பிரதமர் மோடி அனைவரின் முன்பும் பாராட்டியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் கான்கேரில் நடந்த ‘விஜய் சங்கல்ப்’ தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருவர் பிரதமர் மோடியின் ஓவியத்தை கையில் ஏந்தியடி, அவரது பெயரை கூறி அழைத்தார். தனது ஓவியத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியின் மீது, மேடையில் பேசிக் கொண்டிருந்த மோடியின் கண்கள் பட்டன.


உடனடியாக அவர், ‘மகளே… உன்னுடைய ஓவியத்தை பார்த்தேன். மிகவும் அற்புதமாக வரைந்துள்ளாய். உனக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். நீண்ட நேரமாக கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் மகளே… தற்போது சோர்வில் இருப்பாய். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ்காரர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிறுமியிடம் இருக்கும் ஓவியத்தை அவர் எனக்கு கொடுக்க விரும்பினால், அதனை வாங்கி வாருங்கள்.

I Will Write A Letter...': Young Girl Gifts A Painting To PM Modi In  Chhattisgarh | WATCH | India News, Times Now

அத்துடன் அந்த சிறுமியின் முகவரியை எழுதி வாங்கி வாருங்கள். மகளே… கண்டிப்பாக உனக்கு கடிதம் எழுதுகிறேன்’ என்று கூறினார். மோடி இவ்வாறு கூறியதை கேட்டதும், அந்த சிறுமியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.

From around the web