இன்ஸ்டா காதலனை கைவிட மறுத்த மகள்.. ஆத்திரத்தில் முட்டை பொரியலில் எலி மருந்தை கலந்து கொடுத்த தாய்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்முனுசாமி, இவரது மனைவி மல்லிகா (47); இவர்களது 20 வயது மகள் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் ஒரு இளைஞரை இன்ஸ்டாகிராமில் சந்தித்து காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது தாயார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மகள் தனது காதலை கைவிட மறுத்துவிட்டார். பலமுறை சொல்லியும் மகள் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த மல்லிகா நேற்று முட்டை பொரியலில் எலி மருந்தை கலந்து மகளுக்கு சாப்பிடக் கொடுத்தார். அதையும் வாங்கி சாப்பிட்டார். அதன் பிறகு, மகளுக்கு விஷம் கொடுத்தது குறித்து மல்லிகா தனது உறவினர்களுக்குத் தெரிவித்தார்.
அவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அவரது தாயார் மல்லிகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!