தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறும் இடம் , தேதி முடிவு?
தமிழ் திரையுலகில் இளையதளபதியாக ரசிகர்களாக் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இந்நிலையில் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் இலக்கு எனத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பிரம்மாண்ட மாநாடு குறித்து தொடர் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதற்கான இடத்தேர்வும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்டது.தற்போது விக்கிரவாண்டியில் தான் முதல் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் மாநாடு செப்டம்பர் 22 அல்லது 26 ல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு மாநாட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே விழுப்புரத்திற்கு வரும் விஜய் அங்கு தங்கி இருந்து பணிகளை ஆய்வு செய்கிறார்.

அதன்பின் மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கும் நிலையில் 6 மணிக்கு நடிகர் விஜய் உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகலாம் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
