நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம்!

 
ரேஷன்
 

தமிழகம் முழுவதும் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிச் செய்யும் வகையில் மானிய விலையில் உணவுப் பொருட்கள்  ரேஷன் கடைகள் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும்  ஜூலை 13ம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் விரல் பதிவு கைரேகை
ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உட்பட  பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உட்பட பலருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

From around the web