குடிநீர் தொட்டியில் கொத்து கொத்தாக இறந்து கிடந்த குரங்கள்.. அதே தண்ணீரை குடித்து வந்த பொதுமக்கள்!

 
 நந்தி கொண்டா

தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் அருகே உள்ள நந்தி கொண்டா பேரூராட்சியில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நந்திகொண்டா நகராட்சி வார்டு 1ல் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோது துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த நகராட்சி ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்துள்ளனர்.

அப்போது தண்ணீர் தொட்டியில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குரங்குகளை அப்புறப்படுத்தினர். தொட்டி முழுவதும் சுத்தம் செய்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், 'கடந்த ஒரு வாரமாக குடிநீரை பயன்படுத்தும் மக்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்' என, நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குரங்குகள் தண்ணீர் குடிக்க தொட்டியில் இறங்கியிருக்கலாம் என தெரிகிறது. குரங்குகள் மேலே வர முடியாமல் இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. குரங்குகள் இறந்து கிடந்த குடிநீரை அறியாமல் பயன்படுத்தி வந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web