10ம் வகுப்பு பெயர்ப்பட்டியல் திருத்தம் - கால அவகாசம் நீட்டிப்பு!

 
சக்ஸஸ் உற்சாகம் மாணவி மாணவிகள் பள்ளி வகுப்பறை தேர்வு

2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் (Nominal Roll) உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

முன்னதாக மாணவர்களின் விவரங்களைத் திருத்த அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தக் காலக்கெடு அக்டோபர் 12, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு ரிசல்ட்

பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ EMIS தளத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களில் உள்ள பிழைகளைத் துல்லியமாகத் திருத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இது குறித்து உடனடியாகத் தகவல் தெரிவித்து, காலக்கெடுவிற்குள் திருத்தப் பணிகளை முடிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.