தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை... சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜனவரி 10ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டணை என்ற மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றி தாக்கல் செய்யப்பட்ட இச்சட்ட மசோதா அன்று நிறைவேற்றம் செய்யப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை விதிக்கப்படும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும், பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்கட்சியினரும் ஆதரவு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாலியல் குற்றங்கள் தொடர்பான தண்டனைகளுக்கு கடும் வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அந்த சட்டதிருத்தங்கள் தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
