டெங்கு காய்ச்சலால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர் - அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கம்!

 
டெங்கு

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு குறித்துச் சுகாதாரத்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், மாநிலத்தில் தினசரி சராசரியாக 200 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஹரிஷ் குமார் உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக விடுதியில் உரிய சுகாதாரமின்மை நிலவுவதாகவும், இதன் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பிலிப்பைன்ஸ் டெங்கு

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு டெங்கு காய்ச்சலால் அல்லாமல், 'ஸ்கர்ப் டைபஸ்' தொற்றினாலேயே நிகழ்ந்துள்ளது எனத் தமிழகச் சுகாதாரத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கվելுள்ளது.