நேபாளத்தில் மீண்டும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு!
Updated: Sep 29, 2026, 07:29 IST
நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் மனங்க், மைகுடி, பெக்லங், பார்பட் மற்றும் பல்பா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேரைக் காணவில்லை என்பதால், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
