பிலிப்பைன்ஸ் கப்பல் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்வு - கேப்டன் மீது வழக்குப்பதிவு!

 
பிலிப்பைன்ஸ் கப்பல் தீ விபத்து

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நடந்தவுடன் தப்பியோடிய கப்பல் கேப்டன் மற்றும் ஊழியர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் மணிலாவிலிருந்து பலவான் மாகாணம் நோக்கி 134 பேருடன் சென்ற 'ஜன் ஆஸ்டர்' என்ற பயணிகள் கப்பலில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 76 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மீட்புக் குழுவினர் 43 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் முற்றிலும் கருகியுள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் பயணிகளைக் காப்பாற்ற முயலாமல் தப்பியோடிய கப்பலின் கேப்டன் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.