அதிர்ச்சி வீடியோ... இசை நிகழ்ச்சி பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை115 ஆக உயர்வு!

 
ரஷ்யா இசை நிகழ்ச்சி

 ரஷிய தலைநகர் மாஸ்கோவில்  கிராக்கஸ் சிட்டி ஹாலில் அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த அரங்கத்துக்குள்  திடீரென பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைந்து  பார்வையாளர்கள் மீது சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன்  கையெறி வெடிகுண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 115 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 145க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன


 

எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.  இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் மாஸ்கோ படுபயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 கைது செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு உலகநாடுகளின்   தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இசைநிகழ்ச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது உலகையே உலுக்கியுள்ளது.  

.

இசை நிகழ்ச்சி

திடீரென துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டதால் மக்கள் உயிர் தப்ப சிதறியோடினார்கள். தப்பியோடி  மக்கள் மீது வெறித்தனமாக கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். திரும்பும் திசையெல்லாம் தீப்பிழம்புகளும், மரண ஓலமுமாக அந்த இடமே ரத்தக்களறியாக காட்சியளித்தது. அதன் பின்னர், மர்ம கும்பல், அரங்கத்திற்கு தீயிட்டு கொளுத்தி, வெடிமருந்துகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்து 60 பேர் உடல்களை மீட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web