விருதுநகர் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு... பின்னணியில் 'சரவெடி' அரசியலா? - வெளியானது திடுக்கிடும் தகவல்கள்!

 
பட்டாசு விருதுநகர் வெடிவிபத்து பட்டாசு விருதுநகர் வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள கட்டனார்பட்டியில் நடந்த வெடி விபத்து, வெறும் விபத்தல்ல; அது விதிமீறல்களின் உச்சம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தபோதிலும், சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அதிகமாகப் பெண்கள்) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் ஆட்களைக் கொண்டு உற்பத்தி நடந்ததே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம்.

23 உ

தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்காக 'சரவெடி' தேவை பலமடங்கு அதிகரித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட போதிலும், ரகசியமாகச் சரவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வேதிவினை மாற்றமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம், உரிமம் இல்லாத வேறு ஒரு நபருக்கு ஆலையைக் குத்தகைக்கு விட்டுள்ளார். இதனால் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் (52) மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

23

விபத்தில் உயிரிழந்த 23 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. காயமடைந்த 7 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு குறித்துப் பெரிய விவாதமே எழுந்துள்ளது.