கடன் தொல்லையால் விபரீதம்.. குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை.. தவிக்கும் தந்தை!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிர்த்திகா (32), இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மண்ணச்சநல்லூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சாய் நந்தினி (11) என்ற மகள் உள்ளனர். மகன் கோகுல்நாத் (14). மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கீர்த்திகா மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி, கடன் தொகையை செலுத்த முடியாமல் திணறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு அரிசி ஆலையில் கூலி வேலைக்கு சென்று விட்டு, அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பியபோது, மனைவி, மகன், மகள் ஆகியோர் துப்பட்டாவுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கீர்த்திகா கடன் தொல்லையால் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா