டிச.13, டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் ஆர்ப்பாட்டம்.. சீமான் அறிவிப்பு!
இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக 13-12-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
அறிவிப்பு:
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) December 11, 2024
மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு… pic.twitter.com/8o6UxIsbHm
இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
