டிசம்பர் மாத ராசிபலன்கள்... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்!

 
டிசம்பர் ராசி பலன்

இந்த வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சார மாற்றத்தால் சில ராசிகளுக்குத் தொழில் வளர்ச்சி, பணவரவு மற்றும் சுப காரியங்களில் சிறப்பான பலன்களைத் தரவுள்ளது. குறிப்பாக ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு இந்த மாதம் யோக பலன்கள் அதிகமாக காணப்படுகின்றன.

ரிஷபம்: பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழிலில் மேற்கொள்ளும் புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது.

சிம்மம்: அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் சூழல் அமையும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

துலாம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். பழைய கடன்கள் தீரும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

தனுசு: அதிர்ஷ்டக் காற்று வீசும் மாதமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும்.

கும்பம்: திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

ராகு கேது

12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்:

மேஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கைகொடுக்கும். இருப்பினும், வீண் செலவுகளைத் தவிர்த்துச் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்: பொருளாதார உயர்வு ஏற்படும் மாதம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

மிதுனம்: சாதுர்யமான பேச்சால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் பழகுவது நன்மை தரும்.

கடகம்: இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் வேகமெடுக்கும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சிம்மம்: சமூகத்தில் செல்வாக்கு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும்.

கன்னி: பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். சேமிப்பு உயரும். தூரத்துப் பயணங்களின் போது உடைமைகள் மற்றும் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

ராகு கேது பெயர்ச்சி

துலாம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் சுப செய்திகள் தேடி வரும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அமைதியைக் காக்கலாம்.

விருச்சிகம்: கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். மன தைரியம் கூடும். இந்த மாதத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

தனுசு: எல்லா வகையிலும் நன்மைகள் நடைபெறும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். முக்கிய விஷயங்களில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து ஆலோசித்துச் செயல்படவும்.

மகரம்: வருமானம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். மன அழுத்தத்தைக் குறைக்கப் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.

கும்பம்: திடீர் யோகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். கோபத்தைக் கட்டுப்படுத்திப் பேசுவது உறவுகளைப் பலப்படுத்தும்.

மீனம்: பணியிடத்தில் அமைதியான சூழல் நிலவும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். புதிய முதலீடுகளில் இறங்கும் முன் தகுந்த ஆலோசனை பெறுவது சிறந்தது.