ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது... நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு!

 
புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் கொந்தளிப்பு

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 870 கிலோமீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 26-ம் தேதி காலைக்குள் மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த காற்றும், கனமழையும் வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.